இங்கிலாந்தை சேர்ந்த லூசி ஐசக் என்பவர், ஆக்ஸ்ஃபோர்டில் பேராசிரியராக பணியாற்றும் போது கர்ப்பமாக உள்ளதாக தெரிந்தது. ஆனால் 12 வார கர்ப்பத்தில் இருக்கும்போதே, அவருக்கு கருப்பையடைப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. சிகிச்சை இல்லையெனில் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை.
இந்த சூழ்நிலையில், மருத்துவர்கள் அசாதாரணமான முடிவெடுத்தனர். கருவை கருப்பையுடன் சேர்த்து உடலிலிருந்து வெளியே எடுத்து வைத்தனர். பின்னர் புற்றுநோய் கட்டியை அகற்றிய பிறகு, கருவை மீண்டும் உட்புறத்தில் நுட்பமாக பதித்தனர்.
இது சுமார் 2 மணி நேரம் நீடித்த ஒற்றை அறுவை சிகிச்சையாக இருந்தாலும், முழுமையான திட்டமிடல் மற்றும் 30 மருத்துவர்களின் கூட்டு முயற்சியால் சாத்தியமானது. ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் கருவின் வெப்பநிலை கண்காணிக்கப்பட்டது.
சிகிச்சைக்கு பிறகு, குழந்தை முழு ஆரோக்கியத்துடன் பிறந்துள்ளது. இந்த அற்புத சம்பவம், ஒரே குழந்தை இரண்டு முறை பிறந்தது போன்று மருத்துவ உலகில் குறிப்பிடத்தக்க சாதனையாகக் கருதப்படுகிறது.
0 Comments