முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கிராமிய கூட்டுறவு வங்கியில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பாக, ஒரு சந்தேகநபர் நேற்று (20.04.2025) கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 17ஆம் திகதி, முல்லைத்தீவு கிராமிய கூட்டுறவு வங்கியின் கூரை உடைக்கப்பட்டு, அங்கிருந்த ஒரு iPhone மற்றும் ரூ.52,000 பணம் திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வங்கி நிர்வாகம் முல்லைத்தீவு பொலிசில் முறைப்பாடு பதிவு செய்திருந்தது.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், வங்கியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கமெரா மற்றும் சந்தேகநபரின் சமூக ஊடக பதிவுகள் உதவியாக இருந்தன. முகநூலில் போடப்பட்ட தொலைபேசி படம் மூலமாக, திருட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் கொக்குளாய் பகுதியில் வசிக்கும் 25 வயது இளைஞன் எனக் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கொக்குளாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 Comments