உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு மனிதகுல மனத்தை உலுக்கும் சம்பவம் தற்போது இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிரன்வாடா கிராமத்தைச் சேர்ந்த 26 வயது இளம் பெண் ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்தார். அவரது உடல் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அங்கு பணிபுரிந்த ஊழியர் ஒருவர் அவரது காதணிகளை திருடியிருப்பது சிசிடிவி மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.
சம்பவம் குறித்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் தீவிரமாக பரவ, பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மொத்த விசாரணையின் போது, திருடப்பட்ட காதணிகளில் ஒன்று தரையில் கிடைத்ததாகக் கூறி, அதை பொலிஸாரிடம் ஒப்படைத்தார் அந்த ஊழியர். ஆனால் சிசிடிவி காட்சிகள் அவரே நகைகளை எடுத்து வைத்திருப்பதை உறுதிப்படுத்தியது.
பெண்ணின் கணவர் புகார் அளித்ததையடுத்து, வைத்தியசாலையின் தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் கிஷோர் அஹுஜா அதிகாரப்பூர்வமாக போலீசில் முறைப்பாடு செய்துள்ளார். தற்போது சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடைப்பெற்று வருவதாகவும், சம்பந்தப்பட்ட ஊழியருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் காட்சிகள் மக்கள் மனதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மனிதநேயத்தின் அடிப்படை மதிப்புகள் கேள்விக்குள்ளாகும் இந்தச் செயல் சமூகத்தின் ஒட்டுமொத்த நலத்தையே சிந்திக்க வைத்திருக்கிறது.
0 Comments