கோண்டாவிலில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் துண்டாடப்பட்ட கையை சுமார் 8 மணி நேர சத்திரசிகிச்சையின் பின்னர் வெற்றிகரமாக மீண்டும் பொருத்தி நோயாளியின் வாழ்வை மீட்டுள்ளார் யாழ் போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சிகிச்சை நிபுணரும், அர்ப்பணிப்பு மிக்க மருத்துவருமான இளஞ்செழிய பல்லவன்.
முல்லைத்தீவின் பின்தங்கிய கிராமத்தில் குப்பி விளக்கின் வெளிச்சத்தில் கல்வி கற்ற இளஞ்செழியர், போருக்காலத்தில் பலர் வெளியேறிய வேளையிலும், முல்லைத்தீவுக்கே கேட்டு இடமாற்றம் பெற்று மக்களுக்கு சேவையாற்றினார். போருக்கால எரிகாயங்களால் பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் பழைய நிலைக்குத் திருப்பும் நோக்கில் பிளாஸ்டிக் சிகிச்சையில் பயின்று, யாழில் தனது பணியைத் தொடர்ந்தவர்.
போர் காரணமாக கை குறைந்த மீன்வியாபாரியை சிகிச்சை மூலம் மீட்டது உள்ளிட்ட பல சமூக மாற்றங்களைச் செய்தவர் இளஞ்செழியர், அமெரிக்கா உள்ளிட்ட நாட்டுகளில் இருந்து கிடைத்த வாய்ப்புக்களையும் மறுத்து, தொடர்ந்து யாழ் மக்களுக்கு சேவையாற்றி வருகிறார்.
பல்வேறு சவால்களுக்கும் இடையே, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டபோதிலும், போராடி மீண்டும் யாழ் வைத்தியசாலைக்குத் திரும்பி சேவையாற்றும் இவரைப் போன்று அர்ப்பணிப்பும் சமூகப்பணியும் மிகுந்த நிபுணர் ஒருவர் தமிழ்ச் சமூகத்தின் பெருமை எனலாம்.
0 Comments