இங்கிலாந்து உயர் நீதிமன்றம் சமீபத்தில் வெளியிட்ட முக்கிய தீர்ப்பு ஒன்றில், "சட்டப்படி பெண் என்பவர், பெண்களாக பிறந்தவர்களே இருக்க வேண்டும்; திருநங்கைகள் பெண்களாகக் கருதப்பட முடியாது" எனத் தெளிவாக கூறியுள்ளது.
இதேவேளை, பெண் பாகுபாடு சார்ந்த சட்டங்கள் திருநங்கைகளுக்கும் பொருந்தும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த இரண்டாம் பகுதியில் திருநங்கைகள் குறித்த அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதாக தெரிந்தாலும், முதல் பகுதி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தீர்ப்புக்கு எதிராக, லண்டன் மற்றும் எடின்பர்க்கில் பெரும் போராட்டங்கள் நடைபெற்றன. திருநங்கை உரிமைகளுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர்கள், தொழிற்சங்கங்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள் ஆகியோர் இணைந்து எழுச்சியுடன் பேரணியில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் இதில் கலந்துகொண்டு தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர்.
போராட்டத்தின் போது, லண்டனில் உள்ள பாராளுமன்ற சதுக்கத்தில் அமைந்துள்ள மில்லி சென்ட் பாசெட் சிலை உள்பட 7 முக்கிய சிலைகள் சேதப்படுத்தப்பட்டன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது திருநங்கை சமூகத்துக்கான உரிமை, அடையாளம் மற்றும் சட்ட பாதுகாப்பு குறித்து ஒரு புதிய விவாதத்தை எழுப்பியுள்ளது.
0 Comments