கட்டுநாயக்க – ஆடியம்பலம் பகுதியில் தொழிலதிபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்த நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உந்துருளியில் வந்த இருவர் இந்த தாக்குதலை மேற்கொள்ள முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், துப்பாக்கி திடீரென செயலிழந்ததால் குற்றவாளிகளின் திட்டம் தோல்வியடைந்தது.
சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபர் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
0 Comments