மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் 2019 ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு இன்று (ஏப்ரல் 21, திங்கட்கிழமை) காலை இடம்பெற்றது.
உயிரிழந்தவர்களின் உறவினர்கள், அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸின் தலைவர் சிவதர்சன் மற்றும் கட்சியினர் முன்னிலையில், தேவாலயத்தின் முன்பாக மலர் மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏற்றி, மௌன அஞ்சலி செலுத்தினர். நிகழ்வு பொலிஸ் மற்றும் விமானப்படை பாதுகாப்புடன் நடைபெற்றது.
அந்த தாக்குதலில் 14 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன், 80 பேர் காயமடைந்தனர். இதே நாளில், கொழும்பு, நீர்கொழும்பு உள்ளிட்ட இடங்களில் இடம்பெற்ற மற்ற தாக்குதல்களில் 250-க்கும் அதிகமானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments