நாட்டின் கல்வி துறையில் ஒரு புதிய கட்டமாக, மாணவர் எண்ணிக்கை குறைவால் இயங்கிவரும் சிறிய பாடசாலைகளை ஒருங்கிணைக்க கல்வி அமைச்சு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
தற்போது, பத்துக்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே உள்ள பாடசாலைகள் 500ஐ தாண்டியுள்ளன என்பது கவலைக்குரிய விடயமாக அமைந்துள்ளது. பல பாடசாலைகளில், இரண்டு அல்லது மூன்று மாணவர்களே பயிலும் நிலை காணப்படுகிறது.
இந்த நிலையைக் கருத்தில் கொண்டு, மாணவர்களுக்கு சிறந்த கல்வி சூழல் மற்றும் வசதிகளை வழங்கும் நோக்கில், சிறிய பாடசாலைகளை மூடி, அந்த மாணவர்களை அருகிலுள்ள வசதிகள் உள்ள பாடசாலைகளில் சேர்க்கும் திட்டத்தை கல்வி அமைச்சு தயாரித்துள்ளது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கொழும்பு மாவட்டத்தில் பல சிறிய பாடசாலைகள் ஏற்கனவே மூடப்பட்டு, அவைச்சேர்ந்த மாணவர்கள் தற்போது புதிய பாடசாலைகளில் கல்வியைத் தொடருகின்றனர்.
0 Comments